மேஷம்

laknam

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். இந்த வாரத்தில் வெற்றி படிக்கட்டுக்கு மிக அருகாமையில் நிற்கிறீர்கள். உங்களுடைய செயல் திறனால் பொருளாதார முன்னேற்றத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல போகிறீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சிகள் வியாபாரத்திற்கு இருந்த இடையூறுகளை விலக்கி வைக்கும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். மனை இடம் நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். புதன் 8,9 ஆம் இடத்தில் இருக்கிறார். சிக்கலான காரியங்களுக்கு தீர்வு காணும் முடிவை சற்று தள்ளிப் போடுங்கள். குரு ஒன்றா வீட்டில் இருக்கிறார். உத்தியோகத்தில் சிலருக்கு பிரச்சனை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இழந்த நிலை காணப்படும். சுக்கிரன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். மன மொத்த தம்பதிகளுக்கு இடையே மனக்குழப்பம் உண்டாகும். சனி பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூர் பயணங்களால் சில நன்மைகள் உண்டாகும். ராகு 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நிதானமாக செயல்படுங்கள். கேது 7 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களால் உங்களுக்கு சில உபத்திரவங்கள் வந்து சேரும்.

 

ராசி நாதன்
செவ்வாய்
அதிர்ஷ்ட தெய்வம்
முருகன்
திசை
மேற்கு
அதிர்ஷ்ட எண்
9 ,1
அதிர்ஷ்ட எழுத்துக்கள்
சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ
அதிர்ஷ்ட கல்
பவளம்
அதிர்ஷ்ட உலோகம்
தங்கம், தாமிரம், பித்தளை
அதிர்ஷ்ட நாட்கள்
செவ்வாய்
அதிர்ஷ்ட நிறம்
சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை
ராசி சார்பு
நெருப்பு
ராசி பற்றி மேலும் அறிய