இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள். சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.
இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.
நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.
இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.
இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.
நமக்கு வேண்டப்பட்ட யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.
இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.
இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.
இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள்.
தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
சண்டையில், பிறர் அடிப்பது போன்று கனவு கண்டால் விரோதிகள் விலகி விடுவர்.
உங்களது கனவில் நீங்கள் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால், புகழ் உண்டாகும். மேலும் புதிய நண்பர்கள் கிடைக்க போவதாக அர்த்தம்.
உங்கள் கனவில் நீங்கள் மற்றவர்களை அடிப்பது போல பார்த்தால், உங்களுக்கு மற்றவர்கள் மீது இருக்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது.
உங்கள் கனவில் நீங்கள் வன்முறையிலோ அல்லது சண்டையிலோ ஈடுபட்டு தாக்கப்பட்டிருந்தால், நீங்கள் மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட சில பொறுப்புகளிலிருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது என்பதை உணர்த்துகிறது.
நீங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விலங்கை வெல்வது போல கனவு காண்பது என்பது யாரோ உங்கள் மன சமாதானத்தையும், நல்லறிவையும் அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.
குத்துச்சண்டை சண்டைகள் அல்லது கைமுட்டிகளுடன் அடிப்பது அல்லது படைகளுக்கு இடையிலான சண்டை போன்றவற்றைக் கனவில் கண்டால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க போவதாக அர்த்தம்.
உங்களுக்குத் தெரியாத நபர்கள் ஒருவருக்கொருவர் அடிப்பது போல கனவு காண்பது உங்கள் மீது ஏதாவது தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படப்போவதாக அர்த்தம்.
உங்கள் கனவில் உங்களை விட பலவீனமானவர்களை அடிப்பது போல பார்த்தால் உங்களுக்கு தொல்லைகள் அல்லது துரதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை குறிக்கிறது.
நீங்கள் ஒருவரை அடித்து வென்றது போல் கனவு காண்பது நீங்கள் வரவிருக்கும் சோதனையில் வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம்.
பலரை அடித்து வெல்வது போல கனவு கண்டால் செல்வத்தைப் பெறுவதற்கான அறிகுறியாகும்.
நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும். நாம் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும்.
அடிதடி, தகராறு, சண்டை சச்சரவுகளில் நீங்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது போல் கனவு வந்தால், உங்கள் வாழ்க்கை அமைதியானதாக உங்களை சுற்றியிருக்கும் எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும். சண்டையில், பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுக்கு நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும்.
உங்களுக்கு ஏதேனும் ஆபத்து, தொல்லைஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும். மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவுகள் உண்டாகும்.
உங்களது கனவில் மற்றொருவர் அழுவதை போல் காண்பது வரவிருக்கும் துயரத்தை குறிக்கிறது. இந்த வகையான கனவுகளை பார்த்ததும் பதட்டத்துடன் தூக்கம் எழுந்தால் அது பயத்திற்கான அறிகுறியாகும். இந்த கனவினால் ஒரு நாள் முழுவதும் பதட்டத்துடன் காணப்பட்டால் அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ சிக்கல் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
ஒருவரது கனவில் படுக்கையில் அமர்ந்து கொண்டு அழுவது போல பார்த்தால் அவர்கள் வாழ்க்கையில் ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
உங்கள் கனவில் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களுடன் சேர்ந்து அழுவது போல கண்டால் நீங்கள் ஆசைப்பட்டது சீக்கிரத்தில் நடக்க போகிறது என்பதை குறிக்கிறது.
உங்கள் கனவில் உங்கள் கண்ணீரை நீங்களே உங்கள் விரல்களால் துடைத்து கொள்வது போல கண்டால் உங்கள் வாழ்க்கையில் சீக்கிரத்தில் அமைதி வரப்போகிறது என்று அர்த்தம். தற்போது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மனஅழுத்தத்தில் இருந்து விரைவில் வெளியே வருவீர்கள் என்பதை குறிக்கிறது.
உங்களது கனவில் மணமகள் அழுவது போல வந்தால் உங்கள் சகோதர உறவுகளுடன் பிரச்சினை வரப்போகிறது என்று அர்த்தம்.
இறந்த தாய் அல்லது தகப்பன் உங்கள் கனவில் வந்து அழுவது போல கண்டால் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை குறித்து எச்சரிக்க வந்தார்கள் என்று அர்த்தம்.
அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதைக் குறிக்கிறது.
அழகிய பதுமை மங்களப் பொருளுடன் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைகூடும் என்பதைக் குறிக்கிறது.
அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
அயல்நாட்டுத் தூதுவரைக் கனவில் கண்டால் புதிய நபர் ஒருவரின் நட்பு கிடைக்கும்.
அரசனைக் கனவில் கண்டாலும், அரசரோடு நட்பு கொண்டாலும் நல்ல செல்வாக்கும், மதிப்பும், உயர்வும் உண்டாகும்.
அந்தணனைக் கனவில் கண்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
அயல்நாட்டவர் கனவில் தோன்றினால் வணிகத் தொடர்பு உண்டாகும்.
ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் நட்பு கிடைக்கும்.
ஆண்கள் சமையல் செய்வது போல் கனவு வந்தால், நீங்கள் வாழ்வில் சுலபமாக பெரும் புகழை எட்டப்போகிறீர்கள் என்று பொருள்.
இரண்டு பேர் சண்டைப்போட்டுக் கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும் என்பதைக் குறிக்கும்.
இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
இறந்தவர்கள் உங்கள் இல்லத்தில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்பதைக் குறிக்கும்.
இறந்தவர்கள் உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்தாருடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் புகழும் அதன் காரணமாக செல்வங்களும் ஏற்படும்.
உங்களுடைய காதலியுடன் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் உங்கள் காதல் எவ்வகையிலாவது முறிந்து போகப்போகிறது என்பதைக் குறிக்கும்.
உங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்ப்பது போல் கனவு கண்டால், விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறப் போகின்றது என்று பொருள்.
உங்களை யாரோ அடிப்பது போல கனவு வந்தால் உங்கள் திறமையை விளங்கி கொள்ளாமலிருந்த ஒருவர் வலிய வந்து உதவி பண்ணுவார் என்பதைக் குறிக்கும்.
உங்களிடம் இறந்தவர்கள் பேசுவது போல கனவு கண்டால் ஆபத்தான தருணத்தில் உங்களுக்கு உதவ சிலர் முன்வருவார்கள் என்பதைக் குறிக்கும்.
உங்களுடைய உள்ளத்தில் காதல் உணர்வு அதிகமாய் எழுவது போல் கனவு கண்டால் சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு விரைவில் உயரப் போகின்றது என்பதைக் குறிக்கும்.
உங்களை பிறர் அலங்கரிப்பது போல கனவு கண்டால் நண்பரால் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாக நேரிடும்.
உங்களை பிறர் அவமரியாதை செய்வது போல கனவு கண்டால் சிறு சிறு தொல்லைகளும், துன்பங்களும் வரக்கூடும்.
உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால், உங்களுக்கு யாரோ துர்போதனை செய்கிறார்கள் என்று அர்த்தம்.
உங்கள் உடம்பில் இருந்து இரத்தம் வருவது போன்று கனவு வந்தால் உங்கள் திறமை மற்றவர்களால் அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு புகழும், தனலாபமும் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.
உங்கள் உடம்பில் காயத்துக்கு கட்டுப்போட்டு இருப்பது போல் கனவு வந்தால் பண விஷயத்தில் மற்றவர்களால் ஏமாற்றப்பட இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முன் எச்சரிக்கை தேவை.
உங்களுக்கு அறிமுகம் இல்லாதவருடன் நீங்கள் உரையாடுவது போல் கனவு வந்தால் உயர்ந்த நிலை உங்களை வந்தடையப்போகிறது என்று பொருள். உதாரணமாக விரோதியாக இருந்தவர்கள் கூட வலிய வந்து உதவி செய்வார்கள் என்று பொருள்.
ஊமையைக் காண்பது போல் கனவு வந்தால் தொழிலில் தேக்க நிலை ஏற்படும்.
எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால் அடுத்தவர்களுக்கு அறிவுரைக்கூறும் அந்தஸ்து உங்களுக்கு உள்ளது. இதனால் உயர்வான பலன்களை பெறுவீர்கள் என அர்த்தம்.
ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் பூ சூட்டுவது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு நீங்கி ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதைக் குறிக்கும்.
ஒருவரை அடிப்பது போல் நீங்கள் கனவு கண்டால் உங்களுடைய செல்வாக்கை அல்லது திறமையைச் சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும்.
ஓர் அழகான கன்னிப் பெண் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் புதியதாய் ஒரு மகிழ்ச்சி ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கும்.
கல்வி போதிக்கும் ஆசிரியர் கனவில் வந்தால் வாழ்க்கையில் வளங்கள் அமோகமாகப் பெருகிவிடும் என்பதைக் குறிக்கிறது.
காவல்துறையினர் கைது செய்வது போல் கனவு காண்பது அடுக்கடுக்கான அசுபச் செய்திகள் வரப்போவதன் அறிகுறி என்பதைக் குறிக்கிறது.
காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.
காதலனுடன் சுற்றுவது போல் கனவு கண்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாய் குடி கொண்டிருக்கும் முக்கிய ஆசை ஒன்று விரைவில் நிறைவேறப் போகிறது என்பதைக் குறிக்கும்.
காதலியுடன் சுற்றுவது போல் கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு இனிமையான அனுபவம் ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கும்.
கால், கை இல்லாதவர்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களால் எந்த இரகசியத்தையும் காப்பாற்ற முடியாது என்பதைக் குறிக்கும்.
ஒரு வயதான பெண்மணியை கனவில் கண்டால் தனவரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
குழந்தைகளை கனவில் கண்டால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
குருவுடன் பேசுவதாகவும், அவரை காண்பதாகவும் கனவு கண்டால் விரைவில் நன்மை இல்லம் தேடி வரும்.
குலுங்க குலுங்க சிரித்து கொண்டு இருக்கும் குழந்தையை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் பணவரவு உயரும் என்பதைக் குறிக்கிறது.
சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி தீரப்போகின்றது என்பதைக் குறிக்கும்.
சகோதரி உங்கள் கனவில் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதைக் குறிக்கும்.
சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதைக் குறிக்கும்.
தந்தையைக் கனவில் கண்டால் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதைக் குறிக்கிறது.
தந்தை இறந்து போனவராயிருந்து அவர் உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள் என்பதைக் குறிக்கும்.
தன்னை அலங்கரித்துக் கொள்வது போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு காண்பவர் செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும்.
தான் மட்டும் தனித்து உணவு உண்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் உண்டாகும். உறவினர்களைப் பிரிய நேரிடும்.
தாய் உயிருடன் இருந்து அவர் உங்கள் கனவில் வந்தால், நீங்கள் முக்கியமான காரியங்களில் அலட்சியமாய் நடந்து கொள்கிறீர்கள் என்பதைக் குறிக்கும்.
தாய் இறந்து போனவராய் இருந்து அவர் உங்கள் கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்பதைக் குறிக்கும்.
திருமணம் ஆனவர்கள் விருந்துண்டு மகிழ்வதாகக் கனவு கண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
திருமணமாகாத இளைஞர் நெடுநேரம் நம்முடன் பேசுவது போல் கனவு கண்டால் சந்தோஷச் செய்திகள் அடுக்கடுக்காய் வரப் போவதன் அறிகுறியாகும்.
தேவர்களை கனவில் காண்பது மேன்மையை உண்டாக்கும்.
தொட்டிலில் குழந்தை இருப்பது போன்று கனவு காண்பது குடும்பத்தில் இன்பம் பெருகுவதைக் குறிக்கிறது.
தோல் விற்கும் வியாபாரியை கனவில் காண்பது பெரியோர்களின் நட்பு கிடைப்பதைக் குறிக்கிறது.
நடனம் ஆடும் மங்கையை கனவில் கண்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.
நாடோடியைக் கனவில் கண்டால் எதிர்பாராத சங்கடங்கள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
நாவிதர் கனவில் வந்தாலும், முடி திருத்தும் இடத்தில் இருப்பதுபோல் கனவு வந்தாலும் நோய்கள், கவலைகள், பணவிரயங்கள் அதிகரிக்கும். அதனை சுபகாரியங்களுக்கு செலவு செய்வது நன்மை அளிக்கும்.
நீளமாக தொங்கும் கரிய குழல்(கூந்தல்) கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும்.
நீங்கள் பெற்றோர், நண்பர்களை ஓடிப்பிடிப்பதாக கனவு கண்டால் புகழ் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது.
நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும் என்பதைக் குறிக்கிறது.
நீங்கள் பிறரை அவமரியாதை செய்வது போல கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடி வரும்.
நீதிபதியை கனவில் கண்டால் உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவரே உங்களிடம் சமாதானத்திற்கு வருவார்கள் என்பதைக் குறிக்கிறது.
நீங்கள் யார் மீதாவது கோபப்படுவது போல் கனவு கண்டால் உங்களுடைய செல்வாக்கு உயர்ந்தாலும் உங்களுடைய புதிய முயற்சி தோல்வி அடையப்போகின்றது. அதை தள்ளிப்போடுவது புத்திசாலித்தனம் என்பதைக் குறிக்கும்.
நீங்கள் யாரிடமாவது சன்மானம் பெறுவது போல் கனவு கண்டால், உங்களால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என்று பெருமையாய் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு உங்களால் செய்ய முடிந்த காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும் என பொருள்.
நெருங்கிய நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு கண்டால் கனவு காண்பவர்களுக்கு வெகு விரைவில் நற்செய்தி ஒன்று வரும். துன்பங்கள் நீங்கும் என்பதைக் குறிக்கும்.
பலர் ஒன்று சேர்ந்து பாடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு தெரியாமல் உங்களை கவிழ்க்க சூழ்ச்சி செய்வதாக அர்த்தம்.
பாம்பாட்டியைக் கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
பிரசவ வலியில் உள்ள பெண்ணைக் கனவில் கண்டால் பணியில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
பித்தம் பிடித்தவனை கனவில் கண்டால் செல்வ செழிப்பு உண்டாகும்.
பெண், தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
பைத்தியத்தை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.
மற்றவர் பிச்சை எடுப்பது போல கனவு கண்டால், வியக்க வைக்கும் வகையில் உங்களுக்கு ஒரு நன்மை ஏற்படப் போகிறது. மேலும் உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டு இருக்கும் முக்கிய பிரச்சனை ஒன்றும் விரைவில் தீரப் போகிறது என்று பொருள்.
மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நீண்டகாலம் நீங்கள் வாழப்போகிறீர்கள் என்பதைக் குறிக்கும்.
மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படுவது போல் கனவு கண்டால் செய்யும் தொழிலில் பாராட்டு கிட்டும், புகழ் ஓங்கும் என்பதைக் குறிக்கும்.
மற்றவர்கள் சிரிப்பது போல் கனவு கண்டால் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் நீங்களே புத்திசாலிதனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும்.
மற்றவர்களுக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் நீங்கள் திட்டம் போட்டிருக்கும் காரியங்கள் வெற்றிகரமாய் நிறைவேறும் என்பதைக் குறிக்கும்.
மாமியார் உங்களுடைய கனவில் வந்தால் பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் எல்லாவற்றிலும் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கும்.
மாமனார் உங்களுடைய கனவில் வந்தால் சோர்ந்து போயிருக்கும் உங்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்பதைக் குறிக்கும்.
முடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
யாருடனாவது வாக்குவாதம் அல்லது சண்டையிடுவதுபோல கனவு கண்டால் புதுப்புது நண்பர்கள், உறவுகள் வரப் போவதன் அறிகுறியாகும்.
ராமர் அம்புகளைச் சுமந்து வருவதுபோல் கனவு கண்டால் சந்தோஷச் செய்திகள் வரப் போகிறது என்று பொருள்.
வக்கீலிடம் சண்டை போடுவது போல கனவு கண்டால் பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு திணறுவீர்கள்.
விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.
விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.
வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.
