மனையடி சாஸ்திரம்
பொதுவாக மனையடி சாஸ்திரம் என்பது ஒரு மனையில் கட்டப்படும் வீட்டின் அகல நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்? எந்த அகல நீளத்தில் வீட்டின் அறைகள் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும்? வீட்டில் சுவர்கள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்? இப்படி வீட்டின் அளவை குறித்து முழுமையாக விளக்குவதே மனையடி சாஸ்திரம். இங்கு நாம் 6 அடியில் தொடங்கி 100 அடி வரை வீடு மற்றும் அதன் அறைகளின் அளவு இருந்தால் அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றியும், வீட்டின் சுவர் எவ்வளவு உயரம் இருந்தால் என்ன பலன் என்பது பற்றியும் விரிவாக பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில், நல்ல பலன்கள் தரும் எண்களை கொண்டு வீடு மற்றும் அதன் அறைகளின் அகல நீளத்தை அமைப்பது சாலச்சிறந்தது.



