மச்ச சாஸ்திரம்
- சாஸ்திர அடிப்படையில் பலவகை பலன்களைக் கூறும் கணிப்பு முறைகள் உள்ளன. உதாரணமாக பல்லி விழும் பலன். அதேபோலவே உடலில் மச்சங்கள் இருப்பதைக்கொண்டு பலவகை பலன்களை நமது முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.
- முன்னோர்கள் நமது உடலில் உள்ள மச்சங்கள் இருக்கும் இடத்தை அடிப்படையாக வைத்து பலன்களை கணித்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்துச் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை, பொன் பொருள் போன்றவை அளவுக்கு அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை அவன் அதிர்ஷ்டக்காரன் என்று கூட சொல்லமாட்டார்கள். அட..அவன் மச்சக்காரன் என்பார்கள்.
- கஷ்டப்பட்டு உழைக்காமலேயே ஏதாவது ஒரு வழியில் இந்த வசதி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம். அவ்வாறான அதிர்ஷ்டத்திற்கு அவர்கள் உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் மச்சங்கள்தான் வழங்குகின்றன, என்பதுதான் இந்த சாஸ்திரத்தின் அடிப்படை நம்பிக்கை.
- சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள்.
- பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.
- இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும்.
- ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களது உடலில் வலது இடது பக்கத்தில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பாகத்திலும் மச்சம் இருப்பதும் யோகம் தரும்.
